×

ஆர்டிஓ தகவல் வாகன விபத்துகள் குறைந்துள்ளது

காரைக்குடி, பிப்.5: கடந்த 2017ம் ஆண்டை விட 2018ல் 24.9 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன என்று, வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்தார்.
காரைக்குடியில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணவு பிரச்சாரம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சாலை விதிகளை கடைபிடிப்பது குறித்த துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் துவக்கி வைத்து பேசுகையில், ‘‘தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு 65 ஆயிரத்து 562 வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 16 ஆயிரத்து 157 பேர் இறந்துள்ளனர். 2018ம் ஆண்டு 63 ஆயிரத்து 920 வாகன விபத்துகளும் 12216 பேரும் இறந்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டை விட 2018ல் 24.9 சதவீத விபத்துகள் குறைந்துள்ளன. சாலை விதிகளை முறையாக கடைபிடித்தால் வாகன விபத்துகளை தவிர்க்கலாம். சாலையில் பாதசாரிகள் நடந்து செல்லும் போது வாகனத்தை நிறுத்தி அவர்களுக்கு வழிவிட வேண்டும். சீட் பெல்ட் அணிவதன் மூலம் 60 சதவீத உயிரிழப்பை தவிர்க்கலாம். சாலை குறியீடுகள் மற்றும் விதிகளை மதிக்க வேண்டும். வேக வரம்பினை கடைபிடிக்க வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசக்கூடாது. மிகவேகமாக அபாயகரமாக வாகனத்தை இயக்கக் கூடாது. குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. சாலை பொதுவானது. விட்டுக்கொடுக்கும் தன்மை வேண்டும்’’ என்றார். மோட்டர் வாகன ஆய்வாளர் (நிலை 1) முருகன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் சிங்காரவேலு, காரைக்குடி கிளை மேலாளர் சந்தனராஜ், உதவி பொறியாளர்கள் சொக்கலிங்கம், மோகன்ராஜ், விபத்து தடுப்பு பிரிவு பொறியாளர்கள் சண்முகசுந்தரம், பயிற்சி நிலைய பொறியாளர் ஜேசுராஜ், கண்காணிப்பாளர் சிவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : RDO ,vehicle accidents ,
× RELATED கோவையில் 2 முறைக்கு மேல் வாகன...