×

தோல்வியை கண்டு துவளக்கூடாது மாணவர்களுக்கு ஒலிம்பிக் பங்கேற்பாளர் அறிவுரை


சிவகாசி, பிப். 5: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் 56ஆவது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் ராமமூர்த்தி விளையாட்டு விழாவினைத் தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகளுக்கான 110 மீட்டர் தடை ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடத்தப்பட்டன. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஏரோபிக்ஸ், சறுக்கு மரம், யோகா லெசிம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பரிசளிப்பு விழாவில் கல்லூரி முதல்வர் அசோக் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக ஒலிம்பிக் பங்கேற்பாளர் மற்றும் அர்ஜூனா விருதாளர் சார்லஸ் பொரோமெயோ சிறப்புரை ஆற்றினார். அவர் பேசும்போது, “இன்றைய இளைஞர்கள் தங்களிடம் மறைந்துள்ள திறமைகளை வெளிப்படுத்த முன்வரவேண்டும். தோல்வியை கண்டு மாணவர்கள் சோர்ந்துவிடக்கூடாது. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி ஆகும். ஒழுக்கம், தன்னம்பிக்கை, நேர்மை, ஒற்றுமை, கடின உழைப்பு, பயிற்சி ஆகியவை ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் சாதனையைக் கொடுக்கும்’ என்றார்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மதனா ராமமூர்த்தி பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். விழாவின் ஏற்பாடுகளைக் கல்லூரி முதல்வர் அசோக், உடற்கல்வித் துறை இயக்குநர் பால்ஜீவசிங் உடற்கல்வியியல் துறைத் தலைவர் ஜான்சன், உதவி இயக்குநர் கவிதா மற்றும் உடற்கல்வியியல் துறைப் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Olympic ,participants ,
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...