×

மகாதயே அமாவாசையை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு

திருப்பரங்குன்றம், பிப்.5:திருப்பரங்குன்றத்தில் மகாதயே அமாவாசையை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 42 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாதயே புண்ய காலத்தை முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. இதில் மூஞ்சிரு வாகனத்தில் கற்பக விநாயகரும், தங்க ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும், தங்கமயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடனும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்திய கிரீஸ்வரர் பிரியாவிடையுடனும் மற்றொரு ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகையும் கோயிலில் இருந்து புறப்பட்டு சரவணப் பொய்கையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் பின்னர் மீண்டும் கோயிலுக்கு வந்தடைந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Panchamoorthy ,departure ,Thiruparankundam ,
× RELATED இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில்...