×

திமுக ஊராட்சி சபையில் மக்கள் குற்றச்சாட்டு சிறுவர் பூங்காவில் ‘கசமுசா’ போலீசில் சிக்கிய 15 காதல் ஜோடிகள் எச்சரிக்கைக்கு பின் விடுவிப்பு

மதுரை, பிப்.5: மதுரையில் உள்ள சிறுவர் பூங்காவினுள் கசமுசா செய்த 15 காதல் ஜோடிகளை போலீசார் பிடித்து எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.மதுரையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் எக்கோ பார்க் செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு துவங்கியதும் மறைவுகளில் காதல் ஜோடிகள் கசமுசாவில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல மாநகராட்சி ராஜாஜி சிறுவர் பூங்கா, காந்திமியூசியம் அருகே உள்ளது. இங்கு சிறுவர்களுக்காக ராட்டினம், ரயில் உள்பட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிறுகளில் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும். பிற நாட்களில் காதல் ஜோடிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். இரவு நேரங்களில் இந்த காதல் ஜோடிகள் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடுவது வாடிக்கையாகி விட்டது. போலீசாரும் பல முறை எச்சரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கசமுசா நடவடிக்கைகளை அவர்கள் கைவிடுவதாக தெரியவில்லை. இதையடுத்து நேற்று போலீசார் ராஜாஜி பூங்காவிற்குள் சென்றனர். அப்போது 15 காதல் ஜோடிகள் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை வேனில் ஏற்றி தல்லாகுளம் காவல்நிலையம் கொண்டு சென்றனர். ஒரு சிலரது பெற்றோரை போலீசார் வரவழைத்து அறிவுரை கூறி ஜோடிகளை அனுப்பி வைத்தனர். மேலும் சில ஜோடிகளை போலீசாரே கடும் எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.

Tags : couples ,Alappuzha ,
× RELATED கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் 2 இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு!