×

பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை இருக்கா, இல்லையா? பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பு


செம்பட்டி, பிப். 5: பட்டிவீரன்பட்டி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாததால் பிளாஸ்டிக் கழிவுகளை நீர்வரத்து வாய்க்காலில் கொட்டுகின்றனர். இதனால் நிலத்தடி நீர் பாதிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.ஆத்தூர் அருகே அய்யம்பாளையத்திலிருந்து பட்டிவீரன்பட்டி சாலையில் உள்ளது காந்திபுரம். பட்டிவீரன்பட்டி பேரூராட்சி பகுதியிலிருந்து வெளியேறும கழிவுநீர் காந்திபுரம் தரைப்பாலத்தின் வழியாக வெளியேறி மருதாநதியின் நீர்வரத்து வாய்க்காலில் சென்று கலக்கிறது. மேலும் வீடுகளில் சேகரமாகும் பிளாஸ்டிக், குப்பை கழிவுகளை பாலத்திலே கொட்டி விடுகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாதே காரணமாகும். இதனால் பாலத்திலிருந்து வெளியேறும் நீர்வரத்து வாய்க்கால் அடைக்கப்பட்டு வருகிறது. கழிவுநீருடன், பிளாஸ்டிக் கழிவுகளும் செல்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் கால்நடைகள் பிளாஸ்டிக் கழிவுகளை தின்பதால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பட்டிவீரன்பட்டி பேரூராட்சி நிர்வாகம் முறையாக வீடுதோறும் சென்று பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து வளம் மீட்பு பூங்காவிற்கு (உரக்கிடங்கு) எடுத்து செல்ல வேண்டும், மேலும் பாலத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pattiviranpatti Panchayat ,
× RELATED இன்று வாக்குச்சாவடிக்கு சென்று...