×

கொடைக்கானலில் அன்னை குருசடி திருவிழா துவங்கியது

கொடைக்கானல், பிப். 5: கொடைக்கானல் அண்ணாநகர் புனித சலேத் அன்னை குருசடியின் 5ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக மூஞ்சிக்கல் திருஇருதய ஆண்டவர் ஆலயத்திலிருந்து அன்னையின் உருவம் பொறித்த கொடி பவனி நடந்தது. தொடர்ந்து கொடியேற்று விழா திருப்பலி நடந்தது. பின்னர் சலேத் அன்னை குருசடியில் கொடி ஏற்றப்பட்டது. இவ்விழாவிற்கு வட்டார அதிபர் அருட்தந்தை எட்வின் சகாயராஜா தலைமை வகிக்க, உதவி பங்கு தந்தையர்கள் சேவியர் அருள்ராயன், செல்வராஜ் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலை நவநாள் பூஜைகள் நடைபெறும்.


Tags : festival ,Annai Kurusadi ,Kodaikanal ,
× RELATED வெளுத்துக் கட்டிய மழையால்...