×

ஈபிஎப் பென்ஷனர்கள் நலச்சங்க கூட்டம்

திண்டுக்கல், பிப். 5: திண்டுக்கலில் ஈபிஎப் பென்சனர்கள் நலச்சங்கம் சார்பில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகிக்க, செயலாளர் நாகராஜன், பொருளாளர் புருஷோத்தமன், துணை தலைவர் கோபால் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் பிச்சை வரவேற்றார். நாமக்கல் சங்க செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் பாபு கலந்து கொண்டு பேசுகையில், ‘‘குறைந்தபட்ச பென்ஷன் ரூ.1000லிருந்து ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். 2008ல் ரத்து செய்யப்பட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ வசதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக கவர்னர் மூலம் பிரதமரிடம் மனு அளித்து இருந்தோம். ஆனால் தற்போது நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ஈபிஎப் பென்சனர்களுக்கு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் அடுத்த வாரம் நடைபெறும்’’ என்றார்.

Tags : EPF Pensioners Welfare Meeting ,
× RELATED உர பயன்பாட்டு திறனை அதிகரிக்கும் உத்திகள்: வேளாண்துறை அட்வைஸ்