×

ஆசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி துவங்கியது

கோவை, பிப். 5: கோவை மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கான, தலைமை பண்பு பயிற்சி துவங்கியது. மத்திய மனித வள மேம்பாட்டு துறையின், திட்ட ஏற்பளிப்பு குழு ஒப்புதலின்படி, தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்புகளை வளர்ப்பது தொடர்பான பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 40 உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி, கோவை ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு பெண்கள் பள்ளியில் நேற்று துவங்கியது.  இதை, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் துவக்கிவைத்தார். அவர் பேசுகையில், “அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிப்பறை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும். பள்ளி சார்ந்த கணக்குகளை சரியாக பராமரிக்க வேண்டும். பள்ளிகளை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்றார். இதில், மொத்தம் 40 தலைமை ஆசியர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு 7 பேர் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும் 8ம் தேதி வரை இப்பயிற்சி நடக்கிறது.

Tags : leadership trainees ,teachers ,
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...