×

ஓமலூர் அருகே பெருமாள்கோயில் சரபங்கா ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டும் பணி

ஓமலூர், பிப்.5: ஓமலூர் அருகே பெருமாள்கோவில் சரபங்கா ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை எம்எல்ஏ வெற்றிவேல் துவக்கி வைத்தார்.ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் எம்.செட்டிப்பட்டி கிராமம், பெருமாள்கோவில் மாட்டு சந்தையில் இருந்து முத்துநாயக்கன்பட்டி கிராமம் வழியாக, சேலத்திற்கு மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையின் குறுக்கே பெருமாள்கோவில் பகுதியில் சரபங்கா நதி ஓடுகிறது. இந்த சாலை மற்றும் பாலத்தை ஆய்வு செய்த ஓமலூர் எம்எல்ஏ வெற்றிவேல், இருவழிச்சாலையாக அமைக்கும் வகையில், சரபங்கா நதி ஓடும் பகுதிகளில் செல்லும் சாலைகளின் குறுக்கே பாலங்கள் கட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார். கோரிக்கையை ஏற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ₹3 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இதனை தொடர்ந்து பாலம் கட்டுவதற்கான பூமி பூஜையை செய்து, எம்எல்ஏ வெற்றிவேல் பணிகளை துவக்கி வைத்தார். இதேபோல், வேலகவுண்டன்புதூர் மற்றும் வி.புதூர் ஆகிய பகுதிகளில் தார்சாலை மற்றும் பேவர் பிளாக் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகளையும் துவக்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் பச்சியப்பன், ராமச்சந்திரன், ராமசாமி, பரமசிவம், ராஜேந்திரன், தளபதி, ராஜா, முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : bridge ,Sarabanga ,Perumaloor ,river ,Omalur ,
× RELATED கட்டி முடிக்கப்பட்ட 6 மாதத்தில்...