×

மனைவியை அபகரித்து கொலை மிரட்டல் எஸ்எஸ்ஐ, மாஜி கவுன்சிலர் மீது ஆசிரியர் புகார்

நாமக்கல், பிப்.5: ராசிபுரத்தில் தனது 2வது மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, எஸ்எஸ்ஐ மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கொலை மிரட்டல் விடுப்பதாக, கலெக்டரிடம் ஆசிரியர் புகார் மனு அளித்துள்ளார்.
நாமக்கல் அடுத்த ராசிபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். ஆசிரியரான இவர் அரசு ஊழியர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றினார். பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட இவர், ேநற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு, கலெக்டர் ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ராசிபுரம் நாடார் தெருவில் வசித்து வரும் ஆசிரியரான நான், அரசு ஊழியர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளராக பணியாற்றி வந்தேன். வெண்ணந்தூர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மலர்செல்வி என்பவரை, 2வதாக திருமணம் செய்துகொண்டேன். என்னுடன் வாழ்ந்த காலத்தில் மலர்செல்விக்கு வீடு, நகை மற்றும் லட்சக்கணக்கில் பணம் கொடுத்தேன். எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், மலர்செல்வி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தற்போது, மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளேன். இதையடுத்து, மலர்செல்விக்கு நான் வாங்கிக்கொடுத்த வீடு, நகை மற்றும் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். அதற்கு அவர் கொடுக்க மறுத்ததுடன், வெண்ணந்தூர் போலீஸ் நிலையத்தில் என் மீதே புகார் கொடுத்தார். மேலும், அங்குள்ள எஸ்எஸ்ஐ ஒருவருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.   அதேபோல், ராசிபுரம் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஒருவருடனும் மலர்செல்விக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்போது, இவர்கள் இருவரின் கட்டுப்பாட்டில் தான் மலர்செல்வி உள்ளார். இந்நிலையில், எஸ்எஸ்ஐ மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆகியோர் மூலம் மலர்செல்வி எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, அவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுத்து, நான் வாங்கி கொடுத்த வீடு, நகை மற்றும் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து மாவட்ட எஸ்பி அருளரசுவிடம், வேலாயுதம் நேரில் புகார் மனு அளித்தார்.

Tags : teacher ,spouse ,assassination ,SSI ,
× RELATED தமிழக அரசு பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர்: ராமதாஸ் வலியுறுத்தல்