×

கடத்தூர் பகுதியில் கடும் பனிப்பொழிவால் மா உற்பத்தி பாதிப்பு


கடத்தூர், பிப்.5:  கடத்தூர் பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் மா உற்பத்தி வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், கடத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மா பரவலாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, செந்தூரா உள்ளிட்ட மா வகைகள் அதிகளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் மாம்பழங்கள், மற்ற மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது கடத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மா மரங்களில் மாம்பூக்கள் பூத்து குலுங்கும் நிலையில், கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், பூக்கள் உதிர்ந்து கீழே விழுந்து வீணாகிறது. இதனால், நடப்பாண்டு மா விளைச்சல் பெரிதும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags : snowfall ,area ,Kadathur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...