×

கொல்லிமலை சோளக்காடு கிராமத்தில் மா அடர் நடவு பயிற்சி


சேந்தமங்கலம், பிப்.5: கொல்லிமலை சோளக்காடு கிராமத்தில் விவசாயிகளுக்கு, மா அடர் நடவு பயிற்சி முகாம் நடந்தது. கொல்லிமலை தாலுகா, அரியூர் சோளக்காடு கிராமத்தில், தோட்டக்கலைத்துறை மூலம் மா பயிரில் உயர் அடர் நடவு மற்றும் விதான மேலாண்மை பயிற்சி நடந்தது. தோட்டக்கலை உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார அட்மா தலைவர் துரைசாமி, பயிற்சியை தொடங்கி வைத்தார். இதில் வேளாண் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன், அறிவியல் நிலைய வேளாண் விஞ்ஞானி புஷ்பநாதன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.  அப்போது சாதாரணமாக 10க்கு 10 மீ இடைவெளியில் மா சாகுபடி செய்தால், ஏக்கருக்கு 40 மாஞ்செடிகள் மட்டுமே நடவு செய்ய முடியும். அடர் நடவு முறையில் ஒட்டு மாஞ்செடிகளை 3க்கு 2 மீட்டர் இடைவெளியில், 1 ஏக்கருக்கு 680 ஒட்டு செடிகளை நடலாம். பழைய முறையில் 6 முதல் 7 ஆண்டுகளுக்கு பிறகு தான் மரங்கள் காப்புக்கு வரும். அடர் நடவு முறையில் 3 முதல் 4 ஆண்டுகளிலே காப்புக்கு வந்துவிடும்.

பழைய முறையில் ஏக்கருக்கு 5 டன் மகசூல் கிடைக்கும். புதிய முறையில் 10 முதல் 12 டன் மகசூல் கிடைக்கும். ஒட்டுமொத்த மகசூலை ஒப்பிடும்போது இரட்டிப்பு மகசூல் கிடைக்கும். எனவே விவசாயிகள் அடர் நடவு முறையின் புதிய யுக்திகளை கையாள வேண்டும் என வேளாண் அலுவலர்கள் ெதரிவித்தனர். முகாமில், துணை தோட்டக்கலை அலுவலர் சுப்ரமணி, உதவி அலுவலர்கள்  மகேந்திரன், பிரதீஸ்குமார், மாரிசெல்வன், வெங்கடேசன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் கவிசங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : village ,Kollamalai Cholakkad ,
× RELATED பூம்பாறை கிராமத்துக்கு போக்குவரத்து வசதி கோரி மனு..!!