×

உளுந்தூர்பேட்டை அருகே ஸ்டுடியோவில் பூட்டை உடைத்து ₹2 லட்சம் துணிகர கொள்ளை

உளுந்தூர்பேட்டை, பிப். 5: உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தில் வெங்கடேசன் என்பவர் போட்டோ ஸ்டுடியோ கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் பொருட்கள் உடைந்து இருந்ததுடன், ரூ 2 லட்சம் மதிப்பிலான இரண்டு கேமராக்கள், ரூ.22 ஆயிரம் பணம் உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கடைக்கு வந்து கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள கடைவீதியில் நள்ளிரவு நேரத்தில் ஸ்டுடியோ கடை உடைக்கப்பட்டு கொள்ளை நடைபெற்ற சம்பவம் அந்த பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Studio ,Ulundurpet ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு