×

தர்பூசணி, மணிலாவில் பூச்சி தாக்குதல்

முஷ்ணம், பிப். 5: முஷ்ணம் பகுதியில் தர்பூசணி, மணிலாவில் ஏற்பட்டுள்ள பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.முஷ்ணம் அருகே கொழை, சாவடிகுப்பம், கொளதங்குளிச்சி, ராமாபுரம், பாளையங்கோட்டை, சோழத்தரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் முருங்கை மற்றும் தர்பூசணி பயிர் செய்து வருகின்றனர். தர்பூசணியை சென்னை, கோவை, ஈரோடு என பல்வேறு பகுதியில் இருந்து வந்து நேரடியாக மொத்தமாக வாங்கி செல்வர்.தர்பூசணி விதைகள் அரசால் விற்பனை செய்வது இல்லை. தனியார் விதை கடைகளில் ஒரு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,000 வரை விதை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, தர்பூசணி கொடிகளில் பூக்கள் பூத்தும், முறையான காய் உருவாகாமல் பிஞ்சுகளிலேயே பழுத்து கீழே உதிர்ந்துவிடுவதாகவும், செடியில் வாடல் நோய் தாக்குதல் உள்ளதாகவும்  விவசாயிகள் தெரிவித்தனர். இதனால் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுபோன்று மணிலா செடி தழைகளில் பூச்சி தாக்குதல் அதிகரித்து வருகிறது. இவைகளை வேளாண் துறை அதிகாரிகள் பூச்சி தாக்குதலில் பாதிக்கப்பட்ட வயல்வெளிகளை பார்வையிட்டு, உரிய ஆலோசனை வழங்கி மகசூலை காக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : insect attack ,Manila ,
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!