மானூர் அருகே இன்ஜினியரை வெட்டியவர் கைது

மானூர், பிப்.5:  மானூர் அருகே இன்ஜினியரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.மானூர் சரகத்தைச் சேர்ந்த வேப்பங்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் முருகேஷ் (21). டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்துள்ள இவர் கட்டிட கான்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேப்பங்குளம் பஸ் ஸ்டாப்பில் நின்ற போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆர்தர் மகன் ஜேம்ஸ்ராஜ் (31) என்பவர் தனக்கு நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் செலவுக்கு பணம் தர வேண்டும் என முருகேசனை மிரட்டியுள்ளார். தர மறுத்த முருகேஷை அரிவாளால் இடது கையில் வெட்டி உள்ளார். மேலும் பதிலுக்கு முருகேசும் ஜேம்ஸ்ராஜை தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர். முருகேஷ் கொடுத்த புகாரின்பேரில் மானூர் எஸ்.ஐ அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ்ராஜை கைது செய்தார்.

Tags : engineer ,Manoor ,
× RELATED சீட் பிடிப்பதில் தகராறு ஓடும் ரயிலில் ஒருவர் அடித்துக்கொலை