மனிதநேய வாரவிழா நிறைவு

திருவள்ளூர், பிப். 5: திருவள்ளூரில் மாநில அளவில் நடந்த மனிதநேய வார நிறைவு விழா நேற்று நடைபெற்றது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்தார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் க.வீ.முரளிதரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆதிதிராவிடத்துறை நல அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். இதில், அமைச்சர்கள் பா.பெஞ்சமின், வி.எம்.ராஜலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு, ஒரு வாரம் நடந்த பல்வேறு போட்டிகளிலும், கலை நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர் . விழாவில், எம்எல்ஏக்கள் பி.பலராமன், கே.எஸ்.விஜயகுமார், வி.ஜி.ராஜேந்திரன் மற்றும் தாட்கோ மேலாளர் சாந்தி உட்பட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED பால்குட திருவிழா