×

பைக்குகள் நேருக்குநேர் மோதி வாலிபர் பலி

குன்றத்தூர், பிப். 5: 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், வாலிபர் பரிதாபமாக பலியானார். உயிரிழந்தார்.தூத்துக்குடியை சேர்ந்தவர் முருகப்பெருமாள் (25). தனியார் கல்லூரியில் படித்து முடித்து விட்டு, பெருங்களத்தூரில் உள்ள உறவினரின் பேக்கரியை கவனித்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முருகப்பெருமாள், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் உள்ள தனது நண்பரை பார்க்க பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து பெருங்களத்தூர் புறப்பட்டார். திருமுடிவாக்கம் - தாம்பரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே திருநின்றவூரை சேர்ந்த கிருஷ்ணன் (30) என்பவர் பை்ககில் வந்து கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு, நேர் மோதிக்கொண்டது. இதில், தூக்கி வீசப்பட்ட முருகப்பெருமாள் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கிருஷ்ணன் லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் கிருஷ்ணனின் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்ததும், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், உடனடியாக தீயை அணைத்து, கிருஷ்ணனை ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : guy ,
× RELATED இரு சக்கர வாகனத்தில் பின் இருக்கையில்...