×

திருச்சி முதலிடம் பிடிக்க மாநகராட்சி மும்முரம் பொதுமக்கள் கருத்து பதிவு நிறைவு பெற்றது

திருச்சி, பிப்.2: தூய்மை நகர போட்டியில் பொதுமக்கள் கருத்துக்கள் பதிவுசெய்வது நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து முதலிடம் பிடிக்க திருச்சி மாநகராட்சி மும்முரமாக பணியாற்றி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தில் 2019ம் ஆண்டுக்கு நாடு முழுவதும் 4000க்கும் மேற்பட்ட நகரங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் திருச்சி மாநகராட்சி 2016ம் ஆண்டு 3ம் இடத்தையும், 2017ம் ஆண்டு 6வது இடமும் பிடித்தது. 2018ம் ஆண்டு 13வது இடத்தை பிடித்தது. 2019க்கான தூய்மை இந்திய திட்ட கணக்கெடுப்பில் உள்ளாட்சி அமைப்புகளின் ஆவணாக்கத்திற்கு 1250 மதிப்பெண்களும், மத்திய அரசின் நேரடி கள ஆய்வுக்கு 1250 மதிப்பெண்களும், பொதுமக்களின் கருத்துக்கேட்புக்கு 1250 மதிப்பெண்களும், குப்பையில்லா நகரம் மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லாநகரம், கழிப்பறை செயல்பாடு திட்டங்களுக்கு 1250மதிப்பெண்கள் என மொத்தம் 5000 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தூய்மைஇந்தியாதிட்டத்தில் ஸ்வச்சதா செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்கம் செய்து புகார்களை மாநகராட்சி தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.5000 மதிப்பெண்களை பெறுவதற்கு திருச்சி மாநகராட்சியில் நுண்உரம் செயலாக்கம் மையம், குப்பைகளை தரம்பித்து வாங்கும் திட்டம், கழிப்பறை வசதிகள், தூய்மை பணிகள் என திடக்கழிவு  மேலாண்மை தொடர்பாக பல்வேறு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.இந்நிலையில் தற்போது பொதுமக்கள் ஸ்வட்ச் சர்வேக்ஷன் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் தங்கள் கருத்துகள் பதிவு செய்ய நேற்று நிறைவுபெற்றது. அதில் 7 கேள்விகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடதக்கது. இதற்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செய்து பொதுமக்களின் கருத்துக்களை பதிவுசெய்து வந்தது. இதனை தொடர்ந்து நேரடி களஆய்வு நடக்கும். அதனை தொடர்ந்து தூய்மை நகர பட்டியல் வௌியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் முதலிடம் பிடிக்கும் நோக்கில் அதற்கான பணிகளை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மும்முரமாக செய்து வருகிறது.

Tags : Trichy ,Municipal Corporation ,Mumuram ,
× RELATED அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு...