×

ஜல்லிகற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

மன்னார்குடி, பிப். 2:கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தானில்  இருந்து சித்தமல்லி வழியாக  செரு களத்தூர்,  சோத்திரியம் செல்லும் சாலையில் சித்தமல்லி பாலவாய் இடை யிலான பல்லாங்குழி சாலையை உடன் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள்  மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தானில் இருந்து சித்தமல்லி வழியாக  செருகளத்தூர்,  சோத்திரியம் செல்வதற்கு சுமார் 10 கிமீ தூரத்திற்கு சாலை வசதி உள்ளது. இந்த சாலையை சித்தமல்லி, செருகளத்தூர் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், சிறு வணிகர்கள் செருகளத்தூர்,  சோத்திரியம் செல்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. அவசர கதியில் போடப்பட்ட இந்த தரமில்லாத சாலையில் சித்தமல்லி அரசு  டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியிலிருந்து செருகளத்தூர் வரையிலான 3 கிமீ தூரத்திற்கான குறுக்கு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. போதிய பராமரிப்பின்றி சாலை முழுவதும் ஜல்லிகள் பெயர்ந்து பல்லாங்குழி சாலையாக மாறி கிடக்கிறது.

பல்லாங்குழி சாலையால் கடந்த 5  ஆண்டுகளாக இக்கிராமங்களை சேர்ந்த மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். வெளியூர் செல்வதற்கு சுமார் 3 கிமீ தூரம் சுற்றி சென்று பஸ் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையை இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு சென்று வர பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது இக்கிராமங்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்படும் நெல்களை மெயின் ரோட்டிற்கு கொண்டு வந்து அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
பல்லாங்குழி சாலையை சீரமைக்க கோரி பலமுறை கிராம மக்கள் விவசாயிகள் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சித்தமல்லி அரசு  டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியிலிருந்து செருகளத்தூர் இடையிலான பல்லாங்குழி சாலையை அரசும் மாவட்ட நிர்வாகமும் உடன் சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் மற்றும் வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,jungle road ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...