×

சாலியமங்கலம் பூண்டியில் தூர்வாராததால் தூர்ந்து கிடக்கும் வடிகால்

பாபநாசம், பிப். 2: பாபநாசம் சாலியமங்கலம் அருகே பூண்டி பகுதி உள்ளது.  இந்த தெரு வழியாக தான் மலையர்நத்தம், மேல, கீழ கொருக்குப்பட்டு, ஆர்சுத்திப்பட்டு, திருபுவனம், செண்பகபுரம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு செல்ல வேண்டும். இந்த தெருவில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகில் வடிகால்கள் உள்ளன. மழை நாட்களில் இந்த வடிகால் வழியாக தான் மழைநீர் வடிந்து வடவாற்றுக்கு செல்லும். இந்த வடிகால்கள் தூர்வாராததால் வடிகால் அருகில் உள்ள மண்சாலையும், வடிகாலும் ஒன்றாக உள்ளது. இதனால் மழைநீர் வடிய வழியின்றி சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழை நாட்களில் மழைநீரில் நடந்தவாறு தான் செல்ல வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நாங்கள் எவ்வளவோ முயற்சியெடுத்து விட்டோம். எதுவும் நடக்கவில்லை. மழைநாளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கி நிற்கும்போது பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் புத்தகப்பை நனைந்துவிடும். அப்போது எந்த வாகனமும் தெருக்களுக்கு ஓட்டிவர முடியாது. எனவே தற்போது கோடைகாலத்திலேயே வடிகால்களை விரைந்து தூர்வார வேண்டும் என்றனர்.

Tags : Saliyamangalam ,
× RELATED மணக்குடி அண்ணா காலனியை சேர்ந்த 19...