×

புதுகையில் கஜா புயலால் பாதிப்பு ஆட்சேபனை உள்ள நிலங்களுக்கு மாற்று இடங்களில் பட்டா மறுவாழ்வு திட்ட இயக்குனர் தகவல்

புதுக்கோட்டை, பிப்.2: புதுக்கோட்டை   மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும்   புனரமைப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் முன்னேற் றம் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கஜாபுயல் புனர மைப்பு, மறுவாழ்வு மற்றும்   புத்துயிர் திட்ட இயக்குனர் ஜெகநாதன் தலை மையில் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில்   கலெக்டர் கணேஷ், கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுங்கார், மாவட்ட   வருவாய் அதிகாரி ராமசாமி, வேளாண் இணை இயக் குனர் சுப்பையா உள்பட அரசு   அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் ஜெகநாதன் கூறியதாவது, தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட   மாவட் டங்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு பொது மக்களுக்கு தேவையான   கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை   மேற் கொண்டு வருகிறது. கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜாபுயலால்   பாதிக்கப்பட்ட பகுதி மற்றும் முழுவதும் சேதமடைந்த குடிசை வீடுகள், ஓட்டு   வீடுகள் குறித்த விபரங்களின் எண்ணிக்கையில் பட்டா உள்ள வீடுகளின்   விபரங் கள் கேட்டறியப்பட்டது.

மேலும், பட்டா இல்லாத வீடுகளில் ஆட்சேபனையற்ற   நிலங்கள், ஆட்சே பனை உள்ள நிலங்கள் குறித்த விபரங்கள் கேட்டறியப்பட்டு   ஆட்சே பனையற்ற நிலங்களுக்கு பட்டா வழங்கவும், ஆட்சேபனை உள்ள நிலங் களுக்கு   மாற்று இடங்களில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்டு   பட்டா உள்ள வீடுகளுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் புதிய வீடு   கட்டித்தர பணிகள் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு   உள்ளது. இதேபோல நகர் பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கு தமிழ்நாடு   குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை   மேற் கொள் ளப்பட்டு உள்ளது.
பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கவும், புதிய   வீடு தேவைப்படு பவர்களின் எண்ணிக்கையை கண்டறிந்து உரிய கருத்துரு அரசுக்கு   அனுப்பி வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED புதுக்கோட்டையில் 5வது சுற்றாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி