×

தாந்தோணிமலை கருத்தரங்கில் கலெக்டர் பேச்சு

கரூர், பிப். 2: தவ வாழ்க்கை போல் கட்டுப்பாட்டோடு முயன்றால் இலக்கு நமது வசப்படும் என தாந்தோணிமலை கருத்தரங்கில் கலெக்டர்
அன்பழகன் கூறினார்.கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் தாந்தோணிமலை அரசுகலைக்கல்லூரியில் நேற்று கலெக்டர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் போட்டித்தேர்வினை எதிர்கொள்ளும் விதம் குறித்த புத்தகங்கள், ஏற்கனவே தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் வினாத்தாள்கள், தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள் என பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.ண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட பின்னர் கலெக்டர் பேசியது: மாணவ, மாணவியர் தங்களது எதிர்காலத்தை எந்த வகையான வெற்றிப்பாதையில் அமைத்து கொள்ளலாம் என்பதை உங்களுக்கு வலியுறுத்தும் நிகழ்ச்சியாகவே இது அமைந்துள்ளது. நடந்ததை நினைத்து கவலை கொள்ளாமல் நிகழ்காலத்தில் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் குறிக்கோளை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டால் எதிர்காலம் நமக்கு வெற்றியை மட்டுமே பரிசளிக்கும். அனைவருக்கும் சம அளவிலான அறிவே இறைவனால் வழங்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கல்வி அனைவருக்கும் சமமாக வழங்கப்படுகிறது. நம் மீது நாம் முதலில் நம்பிக்கை வைத்து நன்றாக படித்து நம்மை தகுதியுள்ளவராக மாற்றி கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல், உறவினர்கள், பெற்றோர், பொருளாதார நிலை போன்றவற்றை சார்ந்து இருக்க கூடாது. நமது குறிக்கோள், இலக்கினை தினமும் தூங்கி விழித்த முதல் 5 நிமிடங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதேபோல இரவு தூங்க செல்லும் முன் அன்றைய தினத்தில் நாம் செய்த பணிகள் என்ன, நாளை என்ன செய்ய வேண்டும் என்பதை மனதிற்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். மனதில் வேறு எந்த சிந்தனையும் இல்லாது நமது இலக்கை மட்டுமே நினைத்து ஒரு தவ வாழ்க்கைபோல மிகவும் கட்டுப்பாட்டோடு முயற்சி செய்தால் எளிதில் இலக்கு உங்கள் வசப்படும். தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சியோடுசெயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்றார்.தொழில்நெறி வழிகாட்டும் கையேடு வெளியிடப்பட்டு கட்டுரை போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று கிராம நிர்வாக அலுவலராக தேர்வாகியுள்ள முருகானந்தம், அருள்பாண்டி, முகுந்தன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Collector talk ,Tandonimalai Seminar ,
× RELATED விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றிட...