×

தென்னம்பாளையம் மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறியதால் விவசாயிகள் வியாபாரிகள் அவதி

திருப்பூர், பிப்.2:  திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையத்தில் மார்க்கெட்டிற்கு, வெங்காயம், தக்காளி, கத்தரி, முருங்கை, கீரை வகைகள், பூசணி, அரசாணி, மல்லி, சேனை, முள்ளங்கி, பீட்ரூட், தேங்காய், வாழைப் பழம் உள்ளிட்ட காய்கறிகள் தினமும் குறைந்தது 40 டன் வரையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இவைகள், பொங்கலூர், கொடுவாய், தாராபுரம், ஜல்லிபட்டி, சுல்தான்பேட்டை, பல்லடம், அவினாசி, சேவூர் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகளால் விளைவிக்கப்பட்டு தினமும் கொண்டு வரப்படுகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரி மற்றும் டெம்போக்களில் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. ஆனால், இந்த மார்க்கெட்டில் விவசாயிகளுக்கு போதிய வசதிகள் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக காய்கறிகளை வைக்க சிமெண்ட் தரைத் தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால்,  தற்போது குறைந்த இடத்திலேயே சிமெணட் தளம் உள்ளது. பிற இடங்களில் மண் தரை தான் உள்ளது. இந்நிலையில், குடிநீர் குழாய் உடைந்து வெளியேறிய தண்ணீர் மார்க்கெட் வளாகத்தில் தேங்கி, சேறும், சகதியுமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tags : Farmers merchants ,
× RELATED காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகள்,...