×

கோத்தகிரி தாவை செடிகளால்தாவரவியல் பூங்கா நாற்றுகளுக்கு பாதுகாப்பு

ஊட்டி, பிப். 2: ஊட்டியில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளதால், தாவரவியல் பூங்காவில் உள்ள செடிகள் கோத்தகிரி தாவை செடிகளை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக பனிப் பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி, பைக்காரா, கிளன்மார்கன், அப்பர்பவானி, கோரகுந்தா, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் தேயிலை செடிகள் கருகியுள்ளன. தாழ்வான பகுதிகளில் உள்ள காய்கறி தோட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகள் பனியில் கருகாமல் இருக்க தற்போது பாதுகாப்பு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  பூங்காவில் தற்போது 4 ஆயிரம் தொட்டிகளில் சால்வியா, டெல்பீனியம் மற்றும் டேலியா உள்ளிட்ட சில நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.அவைகள் பனியில் கருகாமல் இருக்க கோத்தகிரி தாவை செடிகளை கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. நாற்றுகள் வாடாமல் இருக்க நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானத்தில் புற்கள் கருகாமல் இருக்க ‘பாப்- அப்’ முறையில் தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. மேலும், பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளில், மலர் செடிகளும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags : plants ,Kotagiri Tava ,
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...