×

ஜக்கம்மாள்புரம்-ரோசல்பட்டி மார்க்கத்தில் ஒரு கி.மீ சாலை ஓராண்டாக கண்டம்

விருதுநகர், பிப். 2: ஜக்கம்மாள்புரத்தில் இருந்து ரோசல்பட்டிக்கு செல்லும் சாலை கடந்த ஓராண்டக கண்டமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் ரோசல்பட்டி ஊராட்சியில் ஜக்கம்மாள்புரம் உள்ளது. இங்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து ரோசல்பட்டிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக ஜக்கம்மாள்புரம், ரோசல்பட்டி மாணவ, மாணவியர் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சாலை அமைக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கு மேலானதால், பல இடங்களில் தார்பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. ஜல்லிக்கற்கள் மட்டுமே தலை காட்டுகின்றன. 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ஒரு கி.மீ சாலை கடந்த ஓராண்டாக கண்டமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். நடந்து செல்லும் முதியோர், பெண்கள், சிறுவர்கள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். அவசர காலங்களில் நோயாளிகளை அழைத்துச் செல்ல ஆட்டோக்கள், ஆம்புலன்ஸ், கார்கள் வரமுடியவில்லை.
சிறிய மழை பெய்தாலே சாலை சேறும், சகதியுமாக மாறுகிறது. எனவே, சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Jammammalapuram-Rosalpatti ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...