×

அச்சத்தில் குழந்தைகளின் பெற்றோர்கள் கொசு ஒழிப்பில் ஊருக்குத்தான் உபதேசமா? குடிநீர் தொட்டியின் கீழ் கழிவுநீர் தேக்கம்

விருதுநகர், பிப். 2: கொசுப் புழுக்களை ஒழிக்க, காலண்டர் மூலம் வீடுகளில் நடவடிக்கை எடுக்கும் நகராட்சி, தங்களுக்கு சொந்தமான குடிநீர் தொட்டியில் கீழ் தேங்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என குற்றம்சாட்டுகின்றனர். விருதுநகரில் டெங்கு மற்றும் நோய்களை பரப்பக்கூடிய கொசுக்களின் லார்வாக்களை ஒழிப்பதற்காக, நகராட்சி சார்பில், சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நகரில் உள்ள வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்களுக்கு சென்று, உரல், சிரட்டை, பழைய டயர்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. நல்ல தண்ணீர் மூடி வைக்கப்படாமல் உள்ளதா என ஆராய்கின்றனர். தண்ணீருக்குள் கொசுப்புழுக்கள் உருவாகிறது என சோதனை செய்கின்றனர். இது தொடர்பாக பதிவு செய்யும் காலண்டரை வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களின் முன் ஒட்டியுள்ளனர். இந்த கணக்கெடுப்பில் கொசுப்புழுக்களை உருவாக்கும் வகையில் இருக்கும் வீடுகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், பல அரசு அலுவலகங்களில் கடைப்பிடிபதில்லை என கூறப்படுகிறது. வீடுகளில் மட்டும் தொடர்ந்து கடுமை காட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நகராட்சியே, கொசுப்புழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுப்பதில்லை. நகராட்சிக்கு சொந்தமான கல்லூரி சாலையில் உள்ள மேல்நிலைதொட்டியில், லாரி மூலம் குடிநீர் எடுத்துச் செல்லும் குழாயின் கீழ்பகுதியில் தண்ணீர் தேங்கி, கழிவுநீராக மாறுகிறது. இதில் கொசு உற்பத்தியாகிறது. இதன்மூலம் அப்பகுதி பொதுமக்களுக்கு  டெங்கு போன்ற நோய் ஏற்படுமோ என அச்சத்தில் உள்ளனர். இதனை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலைதொட்டியின் கீழ் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : children ,Sewage depletion ,
× RELATED உலகில் 8ல் ஒரு குழந்தை ஆன்லைன் மூலமாக...