×

காந்திபுரம் பஸ்நிலையத்தில் மூங்கில் குப்பை தொட்டி

கோவை, பிப். 2:   தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடை மற்றும் உணவகங்களில் துணி பை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பஸ் நிலையத்தில் வைக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகளுக்கு பதிலாக மூங்கில் கீற்றுகளால் பின்னப்பட்ட குப்பை தொட்டிகளை வைத்து முன்னோட்டம் பார்க்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான காந்திபுரம் பஸ்நிலையத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மூங்கில் கீற்றுகளால் பின்னப்பட்ட குப்பை தொட்டிகளை, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து வைத்துள்ளோம். தற்போது கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையத்தில் முதற்கட்டமாக 20 மூங்கில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. என்றனர்.

Tags : bus stand ,Gandhipuram ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை