×

போலி ஆவணங்களுடன் வங்கதேச வாலிபர் கைது

பெருந்துறை, பிப்.2:  பெருந்துறையில் போலி ஆவணங்களுடன் தங்கி இருந்த வங்கதேச வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பகுதிகளில் சிலர் சந்தேகப்படும் படி தங்கி இருப்பதாக பெருந்துறை போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து எஸ்ஐ.,ராம்பிரபு தலைமையிலானபோலீசார் வெள்ளோடு ரோடு பணிக்கம்பாளையம் பிரிவில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். அவர் இந்தியில் பேசி உள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில், அவர் வங்கதேசத்தை சேர்ந்த அஸிதுல் இஸ்லாம் (26) என தெரியவந்தது. மேலும், அவரிடம் பெருந்துறை முகவரியில் ஆதார்கார்டு, பான்கார்டு, வாக்காள அடையாள அட்டை ஆகியவை போலியாக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த போலி ஆவணங்களை வைத்து பெருந்துறையில் தங்கி வேலை பார்த்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.


Tags : Bangladeshi ,
× RELATED சென்னை அடையாறில் வங்கதேச நாட்டைச்...