×

கோபி அருகே ரூ.13.20 கோடியில் வேளாண் வணிக வளாகம்

கோபி, பிப்.2: கோபி  அருகே ரூ.13.20 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட வேளாண்  வணிக வளாகம் மற்றும் நெல் வணிக வளாகம் கட்டப்படுகிறது. இப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார்.இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் சிரு பேசுகையில்,`ரூ.6.25 கோடி மதிப்பீட்டில் 5 ஆயிரம் டன் இருப்பு வைக்கும் கிடங்கு, ரூ.50  கோடியில் அலுவலகத்துடன் கூடிய கூட அரங்கு, ரூ.60 லட்சம் செலவில்   வங்கி கட்டிடம் மற்றும் வியாபாரிகள் ஓய்வறை, ரூ.60 லட்சத்தில் உணவு விடுதி மற்றும் விவசாயிகள் ஓய்வறை, ரூ.60 லட்சம் செலவில் பரிவர்த்தனை கூடம், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உலர் களம், ரூ.1.20 கோடி  மதிப்பீட்டில் விரிவாக்கப் பணி, ரூ..12 லட்சம் செலவில் எடைமேடை, ரூ.80  லட்சத்தில் சிமெண்ட் கான்கிரீட் சாலை, ரூ.12 லட்சத்தில்   கழிவறை போன்ற பணிகள் நடைபெறுகிறது’ என்றார்.

Tags : Gopi ,
× RELATED 2014ல் மோடி கொடுத்த கேரண்டி என்னாச்சு: சொன்னாரே..! செஞ்சாரா..? முத்தரசன் கேள்வி