×

வாகைகுளம் நாராயண சுவாமி கோயிலில் தை பெருந்திருவிழா கொடியேற்றம் பிப்.11ம் தேதி தேரோட்டம்

அம்பை, பிப். 2:  அம்பை அருகே வாகைகுளம் வாகைபதி மன் நாராயண சுவாமி கோயிலில் தை பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்பை அருகே வாகைகுளம் வாகைபதியில் உள்ள மன் நாராயண சுவாமி கோயிலில் தை பெருந்திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து காலை கருட வாகனத்திலும் இரவு தண்டிகை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவையொட்டி. தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு பணிவிடைகளும், வாகன பவனியும், இரவு 8 மணிக்கு அன்ன தர்மமும் நடக்கிறது.  2ம் திருநாளான இன்று சுவாமி கருட வாகனத்திலும், ஞாயிறு அன்று சிங்க வாகனத்திலும், 4ம் நாளில் அன்ன வாகனத்திலும், 5ம் நாள் சூரிய வாகனத்திலும், 6ம் நாள் நாக வாகனத்திலும், 7ம் நாள் பூப்பல்லக்கில் பவனி வருதலும் நடக்கிறது. 8ம் தேதி மதியம் 1 மணிக்கு பால்குட ஊர்வலம், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு குதிரை வாகனத்தில் பவனி வந்து கலிவேட்டையாடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் நாள் அனுமன் வாகனத்திலும், 10ம் நாள் காலை 11 மணிக்கு பால்குடம், சந்தன குடம் எடுத்து வருதல் மற்றும் கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சி, அதிகாலை 2 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ம் திருநாளான்று மாலை 4 மணிக்கு தேரோட்டம், இரவு 11 மணிக்கு காளை வாகனத்தில் அய்யா ஆதிநாராயண வைகுண்டர் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதிகாலை 2 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாகைபதி அன்பு கொடி மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : festival celebration ,
× RELATED ஹாங்காங்கில் பன் திருவிழா கொண்டாட்டம்..!!