×

தாழக்குடியில் ஓராண்டாக பொதுமக்களை மிரட்டிய ஒற்றை ஆண் குரங்கு பிடிக்கப்பட்டது

ஆரல்வாய்மொழி, பிப். 2:  ஆரல்வாய்ெமாழி அடுத்த தாழக்குடி பேருராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி அதிகமான குரங்குகள் கூட்டமாக வந்து இப்பகுதிகளில் அட்டகாசம் செய்வதும், அதனை வனத்துறையினர் கூண்டு அமைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் விடுவது வழக்கம்.இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டாக ஒரு ஆண் குரங்கு மட்டும் கூண்டில் சிக்காமல் அப்பகுதியினர் கொடுக்கின்ற உணவினை உண்டு அங்கேயே தங்கி இருந்தது.  இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மணி என்பவரின் வீட்டில் அவரது மனைவி பத்மாவை அந்த குரங்கு தாக்க முற்பட்டது. அப்போது அவரது வீட்டில் வளர்த்த நாய் குரங்கிடம் சண்டை போட்டு பத்மாவை காப்பாற்றியது. இதனால் ஆத்திரமடைந்த குரங்கு நாயை கொடூரமாக கடித்து குதறி  ெகான்றது. எஜமானியை காப்பாற்ற தன் உயிரை மாய்த்த நாய் அப்பகுதி மக்கள் மத்தியில் நிஜ ஹீரோவாக மாறியது. அதேேவளை அந்த குரங்கின் சேட்டை குறையவில்லை. மாறாக அப்பகுதி மக்களை துரத்தி துரத்தி கடிக்க தொடங்கியது. இதுபற்றி ‘தினகரன் நாளிதழில்’ செய்தி வந்தது. இந்நிலையில், அந்த குரங்கை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுமாறு மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவிட்டார்.

இதையடுத்து பூதப்பாண்டி வனச்சரகர் வெங்கடாசல பூபதி அறிவுறுத்தலின் படி வன ஊழியர் துரைராஜ் குரங்கை பிடிப்பதற்கான கூண்டினை வைத்தார். கூண்டில் பழம் வைத்திருந்த நிலையில் குரங்கு அந்த பழத்தை கம்பினால் லாவகமாக எடுத்து சாப்பிட்டது. இதனால் மீண்டும் ஒரு பழத்தினை கயிற்றில் கட்டி கூண்டில் தொங்க விட்டனர். இந்த முறை அதனால் எளிதில் பழத்தை எடுக்க முடியவில்லை. இதையடுத்து பழத்தை எடுக்க உள்ளே வந்த குரங்கு கூண்டில் சிக்கிக்ெகாண்டது. உடனே வன ஊழியர் அந்த குரங்கை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விட்டார். கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதி பொதுமக்களை மிரட்டி வந்த குரங்கு பிடிபட்டதால் அனைவரும் நிம்மதியடைந்தனர்.

Tags : cliffs ,
× RELATED புறநகர் கல்குட்டைகளில் மரணங்கள்...