×

குளத்தூர் அருகே பைக் விபத்தில் இளம்பெண் சாவு

குளத்தூர், பிப்.2: குளத்தூர் அருகே பைக் விபத்தில் இளம்பெண் பரிதாபமாக இறந்தார். குளத்தூரையடுத்த பச்சையாபுரம் கிராமத்தை சேர்ந்த ராமர் மனைவி கல்யாணி(40). அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர் இறந்த துக்க வீட்டிற்கு சென்றார். அங்கு கோடி துணி போடுவதற்காக மற்றொரு உறவினரான பரமசிவம் மகன் சந்துருபாண்டி என்ற வள்ளிகண்ணு(24) என்பவரது ைபக்கில் கல்யாணி வேம்பாரில் உள்ள ஜவுளிக்கடைக்கு சென்றார்.
அப்போது பச்சையாபுரத்தையடுத்து சாலையின் குறுக்காக மாடு சென்றதால்கட்டுப்பாட்டை இழந்த பைக் மாடு மீது மோதியது. இதில் பைக் பின்னாலிருந்த கல்யாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியினர் அவர்களை மீட்டு வேம்பார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கல்யாணியை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சூரங்குடி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : bike accident ,Koothur ,
× RELATED பைக் மீது வேன் மோதி 3 மாணவர்கள் பலி