×

20 ஆண்டு பிரச்னை முடிவுக்கு வந்தது ஜல்லிக் கற்களை ஏற்றி செல்லும் லாரிகளை கண்டித்து பொதுமக்கள் மறியல்

செங்கல்பட்டு, பிப். 2: செங்கல்பட்டு அடுத்த செட்டிப் புண்ணியம் கிராமத்தை ஒட்டி சுமார் 10க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்படுகின்றன. அங்கிருந்து தினமும்  ஆயிரக்கணக்கான லாரிகள் மூலம் ஜல்லி கற்கள். எம் சாண்ட், கருங்கற்கள் செட்டிப்புண்ணியம் தனியார் மற்றும் கோயில் நிர்வாகத்துக்கு சொந்தமான சாலை வழியாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கனரக வாகனங்கள், அதிகளவு செல்வதால் செட்டிப்புண்ணியம், வடகால் தார்சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும், கல்குவாரியில் இருந்து வெளியேறும் புகை, தூசி, மாசுகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் படிந்து விடுகிறது.

இதனால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைவரும் சுவாசக் கோளாறு உள்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை தடுக்கவேண்டும். இவ்வழியாக கல்குவாரி லாரிகள் செல்லக்கூடாது என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். மேலும் செட்டிப்புண்ணியம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் நீதிமன்றத்திலும், தடை உத்தரவு பெற்றனர். ஆனாலும், லாரிகள் சென்றன.
இந்நிலையில், நேற்று மதியம் செட்டிப்புண்ணியம் வடகால் பகுதி மக்கள், செட்டிப்புண்ணியம் - சிங்கப்பெருமாள் கோயில் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்து, மறைமலைநகர் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசினர். அப்போது கல்குவாரி லாரி உரிமையாளர்களிடமும் பேச்சுவார்த்த நடத்தப்பட்டது. பின்னர், பாரங்களை ஏற்றி செல்லும் லாரிகள், மாற்று வழியில் செல்ல வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனை கல்குவாரி லாரி உரிமையாளர்களும் ஏற்று கொண்டனர். இதனால் மறியல் கைவிடப்பட்டது. சுமார், 20 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த பிரச்னை, நேற்று முடிவுக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சுமார் 4 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : public ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...