×

இந்தியன் ரயில்வே துறையில் கேட் கீப்பர் பணி வாய்ப்பு

கிருஷ்ணகிரி, பிப்.1:   கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியன் ரயில்வே துறையில் கேட் கீப்பர் பணிக்கு கோயமுத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், மேட்டூர், ஜோலார்பேட்டை மற்றும் திருச்சி பகுதிகளில் பணி புரிய விருப்பமும், தகுதியுள்ள உள்ள முன்னாள் படைவீரர்கள், தங்களின் பதிவை தீராஜ், தொலைபேசி எண். 9650596170 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம். மேலும், இந்த பணிக்கு முன்னாள் படைவீரர்கள் தற்போது வயது 55யும், 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மாத சம்பளமாக ₹23 ஆயிரம் வழங்கப்படும். மேலும் விரிவான விவரம் பெற விரும்புவோர் 04343-236134 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.  

Tags : Kate ,Indian Railways ,
× RELATED ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக...