×

திருக்குறுங்குடியில் 4 ஆண்டுகளாக பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகம் பொதுமக்கள் பாதிப்பு

களக்காடு, பிப். 1:  திருக்குறுங்குடியில் 4 ஆண்டுகளாக சுகாதார வளாகம் பூட்டிக் கிடப்பதால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி பேரூராட்சிக்குட்பட்ட  13வது வார்டில் கீழநம்பிதோப்பு உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாய கூலி தொழிலாளர்கள் ஆவர். இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கீழநம்பிதோப்பில் தனியார் சேவை நிறுவனம் சார்பில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு, திருக்குறுங்குடி பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பேரூராட்சியின் பராமரிப்பில் சுகாதார வளாகம் செயல்பட்டு வந்தது. சுகாதார வளாகத்திற்கு பேரூராட்சி மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் பயனடைந்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் சப்ளையை துண்டித்த பேரூராட்சி திடீரென அதனை பூட்டிவிட்டதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு சுகாதார வளாகம் திறக்கப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக சுகாதார வளாகம் பூட்டியே கிடக்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மூடப்பட்ட சுகாதார வளாகத்தை திறந்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென அப்பகுதியினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் இன்றுவரை சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக மேற்கொண்டு கீழநம்பிதோப்பில் பூட்டிக் கிடக்கும் சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Tags : bout ,Tirukurukundi ,public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...