கானாவிளையில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

திருச்செந்தூர், பிப். 1:  திருச்செந்தூர் அருகே உள்ள கானாவிளையில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் ஆத்திராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசியதாவது: மக்களை பற்றி சிந்திக்காத இந்த அரசு, அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்யவில்லை. எப்போதும் சிறுபான்மையின மக்களை காப்பது திமுக மட்டுமே. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நான்கரை லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி செய்ய வேண்டும். அதன் மூலம் நமது பகுதியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றி தரப்படும். வேலை வாய்ப்புகள் பெருகும், என்றார்.

கூட்டத்தில், மாநில மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் வேலம்மாள், மாவட்ட துணை செயலாளர் காதர், சிறுபான்மை அணி ராஜேஷ்ரவிசந்தர், தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் வாள்சுடலை, முன்னாள் நகர செயலாளர் மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் கோமதி நாயகம், ராஜசேகர், வழக்கறிஞர் பிரிவு துணை அமைப்பாளர் சாத்ராக், ஊராட்சி செயலாளர் ஆனந்த்ரொட்ரிக்கோ, பேரின்பராஜ், தம்பி, பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பள்ளிப்பத்து திமுக ஊராட்சி சபை கூட்டத்திலும் .அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இக்கூட்டத்துக்கு ஊராட்சி செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.

Related Stories: