×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதுச்சேரியில் 9.59 லட்சம் வாக்காளர்கள்

புதுச்சேரி, பிப். 1: புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி மாநிலத்தில் மொத்தம் 9.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நேற்று  இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய தேர்தல் ஆணையத்தின்  உத்தரவுக்கிணங்க கடந்த ஜனவரி 1ம் தேதி தேதியை தகுதி நாளாக கொண்டு புதுச்சேரி  மாநிலத்தில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி  செப்டம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 31 வரை நடந்தது.

இந்த திருத்தப்பணி  நிறைவடைந்து தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி புதுவை மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 9 லட்சத்து  59 ஆயிரத்து 566 பேர். இதில்  ஆண் வாக்காளர்கள் 4 லட்சத்து 53 ஆயிரத்து 153 பேர், பெண் வாக்காளர்கள்
5 லட்சத்து 6 ஆயிரத்து 320 பேர், மூன்றாம் பாலினத்தவர் 93 பேர் இருக்கின்றனர்.ஏற்கனவே  பட்டியலில் இருந்த 17,331 வாக்காளர்கள் பல்வேறு காரணங்களுக்காக  நீக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் தங்கள்  பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.அனைத்து  வாக்குச் சாவடிகள், வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் உதவி வாக்காளர் பதிவு  அதிகாரி அலுவலகங்
களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்படும்.

பொதுமக்கள் அங்கு  சென்று சரிபார்த்துக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர்  விடுபட்டவர்கள் தங்கள் பெயரை மீண்டும் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் முன் வரை  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகளை  மேற்கொள்ளலாம். அதேபோன்று பொதுமக்கள் வசதிக்காக புதுச்சேரி, காரைக்கால் என  இரண்டு மாவட்டங்களில் 1950 என்ற இலவச தொலைபேசி எண் வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்கள்  சந்தேகங்களை தெரிந்து கொள்ளலாம். கடந்த தேர்தலின் போது புதுச்சேரி  மாநிலத்தில் 930 வாக்குச்சாவடிகள் இருந்தது. தற்போது 970 வாக்குச்சாவடிகளாக  அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் வில்லியனூர்  தொகுதியில் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 76 வாக்காளர்களையும், அதற்கு  அடுத்தப்படியாக உழவர்கரை 39 ஆயிரத்து 995 வாக்காளர்களையும், அடுத்ததாக  அரியாங்குப்பம் 36 ஆயிரத்து 785 வாக்காளர்களையும் கொண்டுள்ளது.
 மிகக்குறைந்த வாக்காளர் உள்ள தொகுதியாக உருளையன்பேட்டை 23 ஆயிரத்து 963  வாக்காளர்களை கொண்டுள்ளது. பொதுமக்கள் இலவச தொலைபேசியிலும், தேர்தல் துறை  இணையதள முகவரியிலும் விவரங்களை தெரிந்து கொண்டு புகார் தெரிவிக்கலாம். 14  ஆயிரத்து 552 இளம் வாக்காளர்கள் பதிவு செய்துள்ளனர்.பாராளுமன்ற ேதர்தலுக்கு  தயாராகும் வகையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்
களும்  பரிசோதிக்கப்பட்டு, கோளாறு உள்ள இயந்திரங்கள் பெல் நிறுவனத்துக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி மையங்கள் கண்டறியப்பட்டு  மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு பாதை, குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்படும்.  பாராளுமன்ற தேர்தல் நெருங்கி  வருவதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அதிகாரிகளை  வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நிர்வாக சீர்திருத்தத்துறை  மேற்ெகாண்டுள்ளது. புதுச்சேரியில் அனைத்து வாக்காளர்களுக்கும்  வாக்காளர் அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற,  பாராளுமன்ற தேர்தலில் விதிமுறை மீறியதாக 100க்கும் மேற்பட்ட  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை தாக்கல்  செய்யப்பட்டது.  இதில் 12 வழக்குகள் மட்டும் விசாரணையில்  உள்ளது. எந்த ஒரு வழக்கும் வாபஸ் பெறப்படவில்லை. இவ்வாறு அவர்  கூறினார். பேட்டியின்போது, மாவட்ட தேர்தல் அதிகாரி அபிஜித் விஜய் சவுத்ரி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி குமார், துணை தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : voters ,Puducherry ,
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...