×

தேக்கம்பட்டி முகாம் நிறைவு மன்னார்குடி கோயில் யானைக்கு வரவேற்பு

மன்னார்குடி, பிப்.1: கோவை மாவட்டம் தேக்கம்பட்டியில் 48 நாட்கள்  நடந்த புத்துணர்வு முகாமில் பங்கேற்ற மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சொந்தமான செங்கமலம் யானை முகாம் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று மன்னார்குடிக்கு திரும்பியது. ஏராளமான பக்தர்கள் திரண்டு செங்கமலம் யானைக்கு உற்சாகமான வரவேற்பை அளித்தனர். மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத் தலமான ராஜகோபாலசுவாமி கோயிலுக்கு சொந்தமான செங்கமலம் (31) என்ற பெண் யானை வழக்கம்போல் கடந்த டிசம்பர் 14ம் தேதி முதல் நடைபெற்ற புத்துணர்வு முகாமிற்கு யானை பாகன் ராஜா, உதவியாளர் கார்த்திக் ஆகியோருடன் சென்றது. இம்முகாமிற்கு தமிழகம் முழுவதிலிருந்து 26 யானைகளும், புதுச்சேரியில் இருந்து 2 யானைகளும் சேர்த்து 28 யானைகள் சென்றன. தேக்கம்பட்டி யில் தொடர்ந்து  48 நாட்கள் நடைபெற்ற புத்துணர்வு முகாமில் பங்கேற்ற யானைகளுக்கு தினந்தோறும் நடைபயிற்சி, சவர் குளியல், மண் குளியல், சத்தான உணவுகள், மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. புத்துணர்வு முகாம் நிறைவு பெற்றதை தொடர்ந்து செங்கமலம் யானை தனி லாரியில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு நேற்று அதிகாலை மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் செங்கமலம் யானை கோயிலுக்கு வந்த செய்தியறிந்த பக்தர்கள் ஏராளமானோர் கோயிலுக்கு திரண்டு வந்து உற்சாகமான வரவேற்பை அளித்தனர்.

Tags : Manakkadu Temple Complex ,camp ,Tecompatti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு