×

52வது பிறந்த நாள் கொண்டாட்டம் அமைச்சர் கந்தசாமிக்கு முதல்வர், அமைச்சர்கள், தலைவர்கள் வாழ்த்து

பாகூர், பிப். 1: அமைச்சர் கந்தசாமி தனது 52வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு, தனது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். அவரது பிறந்த நாளையொட்டி மணக்குள விநாயகர் கோயிலில், நேற்று காலை 7.30 மணிக்கு இளைஞர் காங்கிரசார் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு வழிபாடு நடந்தது.லட்சுமிநாராயணன் எம்எல்ஏ தலைமையில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தொகுதி தலைவர் பாலமுரளி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் குமரேஸ்வரன், அமைச்சர் கந்தசாமியின் மகன்கள் அமர்நாத், விக்னேஷ், சகோதரர் பாலு, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் சேர்மனும், அமைச்சர் கந்தசாமியின் சகோதரியுமான முனியம்மாள் சாம்பவசிவம், முன்னாள் எம்எல்ஏ நீலகங்காதரன், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர்.தொடர்ந்து, முதலியார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில், அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், அமைச்சர் கந்தசாமி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதில், எம்எல்ஏக்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், பாலன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன், அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், அசனா, திமுக அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் எம்எல்ஏ அருள்முருகன், கென்னடி, தொகுதி மற்றும் மாநில நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், பல்வேறு அமைப்பினர் விழாவில் பங்கேற்று, அமைச்சர் கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதேபோல், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் குலாம்நபி ஆசாத், முகில் வாஸ்னிக், சஞ்சய்தத், முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம் ஆகியோர் டெல்லியில் இருந்து செல்போனில் அமைச்சர் கந்தசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.அமைச்சர் கந்தசாமியின் பிறந்த நாளையொட்டி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஏம்பலம் தொகுதி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Tags : Chief Minister ,Kanthasamy ,Ministers ,Leaders ,birthday celebration ,
× RELATED வீண் விளம்பரம் தேடுவதிலேயே...