×

ஆதிகும்பேஸ்வரர் கோயில் இடத்தில் குடியிருப்போரின் வாடகையை குறைக்காவிட்டால் உண்ணாவிரதம்

கும்பகோணம், பிப். 1:  கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் குடியிருப்பவர்கள் மனைக்கான வாடகையை குறைக்க வேண்டுமென ம்  என அறநிலையத்துறை ஆணையருக்கு கும்பகோணம் நகர குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது. அதில் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் 200க்கும் மேற்பட்டோர் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். அவ்வப்போது கோயில் நிர்வாகத்தினர் நிர்ணயிக்கும் வாடகையை முறையாக செலுத்தி வருகிறோம். தற்போது நிர்வாகத்தினர், கோயில் நிலத்துக்கான வாடகையை 3 மடங்கு உயர்தியுள்ளனர். 2016ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் உயர்த்தியுள்ளதாக கூறி நிலுவைத்தொகையை உடனடியாக செலுத்த உத்தரவிட்டுள்ளனர். நாங்கள் அனைவரும் தினக்கூலிகளாக வேலை பார்த்து வரும் நிலையில் எங்களது கீற்று வீடுகளை தீவிபத்து மற்றும் மழைக்கால சேதங்களை தடுப்பதற்காக கோயில்  நிர்வாகத்தினரின் ஒப்புதலுடன் தகர சீட்டுகள், சிமென்ட் சீட்டுகள் மாற்றி கொண்டு  அதற்கான வரிகளையும் செலுத்தி வருகிறோம். எனவே 3 மடங்காக உயர்த்தியுள்ள வாடகையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் கோயில் நிலத்தில் குடியிருக்கும் குடும்பத்தினரை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : tenant ,Adikumbeswarar temple ,
× RELATED காரைக்குடியில் வீடுகளை அகற்றுவதை...