×

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

திருவையாறு, பிப். 1:  திருவேதிக்குடியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த வேதபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பிலான நஞ்சை நிலம் மீட்கப்பட்டது.திருவையாறு அடுத்த திருவேதிக்குடியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான வேதபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ள நஞ்சை நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இக்கோயிலுக்கு பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாமல் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதைதொடர்ந்து இந்து அறநிலையத்துறை சார்பில் தஞ்சாவூர் வருவாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் சாகுபடியாளர் தொகை செலுத்த தவறியதால் நஞ்சை நிலத்தை வருவாய் நீதிமன்ற தீர்ப்பின்படி வருவாய் நீதிமன்ற செயலாக்க வருவாய் ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நில கையகப்படுத்தப்பட்டு கோயிலிடம் ஒப்படைக்கப்பட்டது.
 இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் சிவராம்குமார், செயல் அலுவலர் பழனிவேல், ஆய்வாளர்கள் குணசுந்தரி, கந்தசாமி, திங்களூர் சந்திரன் கோயில் மேலாளர் கண்ணன் பங்கேற்றனர். நிலக்கடலை பயிரை தாக்கும்
பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை

விவசாயிகளுக்கு ஆலோசனை

வேரழுகல் நோய், துரு நோய், டிக்கா இலைப்புள்ளி நோய் முக்கியமானதாகும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதை விதைத்த 30 நாட்கள் கழித்து செடியை சுற்றி வைத்து மண் அணைக்க வேண்டும்.சேதுபாவாசத்திரம், பிப். 1:  சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் நிலக்கடலை பயிரை தாக்கும் பூச்சி, நோய்களை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் மார்கழிப்பட்டம் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலையை பொறுத்தவரை இளம்பயிர்களில் சுருள்பூச்சியும், சற்று வளர்ந்த பயிர்களில் புரடீனியா புழுவும் தாக்கக்கூடும். சுருள் பூச்சியை கட்டுப்படுத்த டைகுளோர்வாஸ் 250 மிலி அல்லது குளோர்பைரிபாஸ் 500 மிலி அல்லது மானோகுரோட்டபாஸ் 300 மிலி இதில் ஏதேனும் ஒரு மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஏக்கர் பரப்பில் மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். புரடீனியா புழுக்களை கட்டுப்படுத்த வரப்புகளில் பொறிப்பயிராக தட்டைப்பயிறு, ஆமணக்கு, மக்காச்சோளம் விதைக்க வேண்டும். இதனால் தீமை செய்யும் பூச்சிகள் அழிந்து நன்மை செய்யும் பூச்சிகள் பெருக வாய்ப்புள்ளது.
நிலக்கடலை மற்றும் பொறிப்பயிர்களின் நிலைகளில் உள்ள இளம்புழுக்களை கையால் எடுத்து நசுக்கி அழிக்க வேண்டும். புரடீனியா தாய் அந்துப்பூச்சிகளுக்கு உண்டான இனக்கவர்ச்சி பொறியை வயலில் 4-5 இடங்களில் வைக்க வேண்டும். 100 புரடீனியா புழுக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட என்பிவி வைரஸ் கரைசலை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து அதோடு ஒரு கிலோ வெல்லப்பாகு மற்றும் 100 மிலி ஒட்டுத்திரவம் (டீபால்) கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். நோய்களை பொறுத்தவரை வேரழுகல் நோய், துரு நோய், டிக்கா இலைப்புள்ளி நோய் முக்கியமானதாகும். வேரழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் புளோரசன்ஸ் பாக்டீரியாவை 20 கிலோ மக்கிய தொழு உரத்துடன் கலந்து விதை விதைத்த 30 நாட்கள் கழித்து செடியை சுற்றி வைத்து மண் அணைக்க வேண்டும். துரு நோய் மற்றும் இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் மற்றும் மேங்கோ செப் 400 கிராம் அல்லது குளோரோதளோனில் 400 கிராம் இதில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பானால் தெளித்து பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Vedapureeswarar temple ,
× RELATED செய்யாறில் பிரசித்தி பெற்ற...