×

பெயர் சேர்க்க, நீக்க மக்களுக்கு அழைப்பு தாராசுரம் ஊராட்சி அரசு பள்ளிச்சுவரில் அழிந்துபோகும் ஓவியங்கள்

கும்பகோணம், பிப். 1:  தாராசுரம் ஊராட்சி அரசு பள்ளிச்சுவரில் அழிந்துபோகும் வகையில் ஓவியங்கள் உள்ளது. இதை புதுப்பிக்க நிதியில்லையென கல்வித்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளி சுவரில் அழிந்து போன ஒவியங்களை புதுப்பிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாராசுரத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி சுற்றுச்சுவரில் பழங்காலத்து கலைகள், வீரவிளையாட்டு, சுதந்திர போராட்ட வீரர்கள், புராதன கோயில்கள், அறிவியல் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பாரம்பரிய பழக்கவழக்கங்களை ஓவியமாக வரைவதற்கு முடிவு செய்தனர். அதன்படி சில ஆண்டுகளுக்கு முன் பேரூராட்சி நிர்வாகத்தினர் தனது சொந்த நிதியான ரூ.2 லட்சம் மதிப்பில் பல்வேறு ஓவியங்கள் வரையப்பட்டன.தற்போது சுற்றுச்சுவர் போதுமான பராமரிப்பு இல்லாததால் இயற்கை உபாதைகள் கழிக்கும் இடமாகியும், மதுபானம் அருந்தும் இடமாக மாறி வருகிறது. தற்போது சுவரில் உள்ள ஓவியங்கள் அழிந்தும், பெயர்ந்தும் காட்சியளிக்கிறது. சுவரில் உள்ள ஓவியங்களை மீண்டும் புதிதாக வரைய வேண்டுமென கல்வித்துறையினரிடம் கேட்டபோது போதுமான நிதியில்லையென பதில் கூறுகின்றனர். எனவே பாரம்பரியம், பழக்கவழக்கம், வீரவிளையாட்டு உள்ளிட்டவை குறித்து அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் சுவரில் வரையப்பட்ட ஓவியம் மிகவும் அவலநிலையில் உள்ளது. எனவே மீண்டும் ஓவியங்களை புதுப்பிக்க போதுமான நிதி ஒதுக்கி சுவரில் ஓவியங்களை வரைந்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இதேபோல் அனைத்து பள்ளிசுவர்களிலும் பாரம்பரியம், கலாசாரத்தை உணர்த்தும் வகையில் ஓவியங்களை வரைய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Darasuram Panchayat ,
× RELATED பாபநாசம் அருகே பல்வேறு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் கைது