×

மதுரையில் எஸ்எஸ்ஐ.க்கு சரமாரி அரிவாள் வெட்டு ரவுடிக்கும்பல் அட்டகாசம்

மதுரை, பிப். 1:  எஸ்எஸ்ஐ.யை சரமாரி வெட்டிய 4 பேர் கொண்ட ரவுடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரையில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை ஆயுதப்படை வளாகம், குதிரைப்படை குடியிருப்பில் வசிப்பவர் செல்வராஜன் (57). இவர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றிரவு ரோந்து பணியில் சீருடையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது இஸ்மாயில்புரம் 6வது தெருவில் 4 பேர் கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு எஸ்எஸ்ஐ செல்வராஜன் விரைந்து வந்தார். அவரை பார்த்த அந்த கும்பல், அரிவாளால் வெட்ட வந்தது. அப்போது இடது கையால் செல்வராஜன் தடுத்தார். இதில் அவரது மணிக்கட்டு பகுதியில் அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.காயமடைந்த செல்வராஜனை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இங்கு முதலுதவிக்குப்பின், அவர் மேல் சிகிச்சைக்காக கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து, விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிய 4 பேர் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். ரவுடி கும்பலை பிடிக்கச்சென்ற எஸ்எஸ்ஐ. அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : SSI ,Madurai ,
× RELATED சாத்தான்குளம் ஏட்டு எஸ்எஸ்ஐயாக பதவி உயர்வு