×

ஓய்வூதிய பணத்தை கந்துவட்டிக்கு கொடுத்ததாக ஓய்வு அதிகாரி ஒப்புதல் நடவடிக்கை எடுக்க டிஎஸ்பிக்கு ஆர்டிஓ பரிந்துரை

மயிலாடுதுறை, பிப்.1: மயிலாடுதுறையில் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையில் ஓய்வுபெற்ற பணத்தைக் கொண்டு கந்து வட்டிக்கு கொடுத்தது தெரியவந்ததால் நடவடிக்கை எடுக்க டிஎஸ்பிக்கு மயிலாடுதுறை ஆர்டிஓ பரிந்துரை செய்துள்ளார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் வசித்த வரும் செந்தில் என்பவர், 2012ம் ஆண்டு மயிலாடுதுறை கிளைச்சிறைத்துறையிலிருந்து ஓய்வுபெற்ற முருகேசன் என்பவரிடம் ரூ.12லட்சம் 5 பைசா வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார்.  சிறுகச்சிறுக ரூ.38 லட்சம் வரை கட்டி முடித்தும் பூர்த்திசெய்யப்படாத செக்குகள், ஸ்டாம்ப் ஒட்டிய வெற்றுபேப்பர்கள், பூர்த்தி செய்யப்படாத பத்திரங்கள், வீட்டு பத்திரங்கள் போன்ற ஆவணங்களை தராமல் இழுக்கடித்துள்ளார்.பல மாதங்கள் கழித்து மேலும் ரூ.1 லட்சம் பணம் வேண்டும் என்று மிரட்டவே அவர் கடந்த 23ம் தேதி மயிலாடுதுறை ஆர்டிஓவிடம் மனு அளித்திருந்தார், அதற்கான விசாரணை நேற்று மயிலாடுதுறை ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. விசாரணையின்போது, அரசூர் கவியரன், நகை மதிப்பீட்டாளர் ஜீவானந்தம், கும்பகோணம் இம்ரான், காய்கறி வியாபாரி ஜோதி மனைவி, இரவுக்காவலர் வெங்கட்ராமன், தனியார் பள்ளி ஆசிரியைகள் 4 பேர், திருவிளையாட்டம் கண்ணன் இந்திரா, மீன் விற்பனையாளர் மல்லிகா, மேலும் சிவராமகிருஷ்ணன் என 16 நபர்கள் இந்த கந்துவட்டியால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
கந்துவட்டிக்கு பணம் கொடுத்த முருகேசனிடம் ஆர்.டி.ஓ.தேன்மொழி கேட்டபோது, நான் ஓய்வுபெற்றபோது வாங்கிய தொகையை வட்டிக்கு கொடுத்து வருகிறேன், வட்டித்தொழில் செய்வதற்கு எந்தவித அனுமதியும் அரசிடமிருந்து பெறவில்லை என ஒத்துக்கொண்டார்.

யார் யார் பாதிக்கப்பட்டுள்ளார்களோ அனைவரும் தனித்தனியாக புகார் அளிக்கவேண்டும் என்று ஆர்டிஓ கேட்டுக்கொண்டார்.   அரசு அனுமதியின்றி வட்டித்தொழில் செய்துள்ளதும் அது கந்துவட்டிக் கொடுமை என்பதாலும் இந்த வழக்கை மயிலாடுதுறை காவல்துறை விசாரிக்க வேண்டும் என்றும் அந்த புகாரை மயிலாடுதுறை டிஎஸ்பிக்கு அனுப்பி வைக்கிறேன் என்று ஆர்டிஓதெரிவித்தார்.போலீசார் விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என்று தெரிவித்தார்.  இந்த நபரால் பாதிக்கப்பட்டவர்கள் மயிலாடுதுறை ஆர்டிஓவிடம் மனு அளித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Tags : RDO ,bidder ,
× RELATED அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முற்றுகை