×

தளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்தளவாய்சுந்தரம் கோரிக்கை கவிமணிக்கு மணிமண்டபம் மானிய கோரிக்கையின் போது பரிசீலனை அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

நாகர்கோவில்,பிப்.1: கவிமணிக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து மானிய கோரிக்கையில் பரிசீலித்து நல்ல அறிவிப்பு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பால்வள தலைவர் அசோகன் வாழ்த்தி பேசினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் கலந்துகொண்டார். அவர் பேசுகையில், தமிழக அரசு ஜெயலலிதா வழியில் மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறது. இங்கு வந்துள்ள செய்திதுறை அமைச்சரிடம் கவிமணிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கிறேன் என்றார். அதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கருவிலிருந்து கல்லறை வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். தேர்தல் வாக்குறுதியில் கூறியவற்றை நிறைவேற்றினார். அவரது வழியில் இந்த அரசு செயல்படுகிறது. ஜெயலலிதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, மாற்று கட்சி உறுப்பினர் கோரிக்கை வைத்த சில நிமிடங்களிலேயே கவிமணிக்கு சிலை வைப்பதாக அறிவித்து செயல்படுத்தினார். அதுபோல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைக்கு மணிமண்டபம் அமைப்பது குறித்து  மானிய கோரிக்கையில் பரிசீலித்து நல்ல அறிவிப்பு வரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை ஜெயலலிதா வழங்கினார். அவரது வழியில் இந்த அரசு இந்தியாவிலேயே பண்டிகை கொண்டாட ₹1000 வழங்கியுள்ளது.
கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேசுகையில், மாற்றுத் திறனாளிகளுக்கு ஜெயலலிதா அரசு மாதாந்திர உதவித்தொகை உள்பட ஏராளமான நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக கூறினார். தொடர்ந்து,  பிரெய்லி வாட்ச், மூன்று சக்கர வாகனங்கள், வங்கி கடன் மானியம், காதுகேட்கும் கருவி, சிபி சேர் என 152 நபர்களுக்கு ₹76.43 லட்சத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags : Minister of Commerce ,Katamur Raju Information Commissioner ,Request ,
× RELATED டெல்லியில் 5வது நாளாக தொடரும்...