ஆர்.கே.பேட்டை கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் ஊராட்சி சபை கூட்டம்: கும்மிடிப்பூண்டி கி.வேணு பங்கேற்பு

பள்ளிப்பட்டு, பிப். 1: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கினங்க ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றியத்தில் அம்மையார்குப்பம், சந்திரவிலாசபுரம் மற்றும் கிழக்கு ஒன்றியத்தில் ஆர்.கே.பேட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர்கள் பா.சம்பத், கோவிந்தசாமி, ஊராட்சி துணை செயலாளர் கே.பி.கிருபானந்தம் தலைமை தாங்கினர். ஒன்றிய செயலாளர்கள் சி.என்.சண்முகம், பி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் குடிநீர், சாலை வசதி, தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணி, அரசு கலைக்கல்லூரி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பற்றி பேசினர். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி கி.வேணு கலந்துகொண்டு பேசினார்.

இதில் மாநில நெசவாளரனி துணை தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம், மாவட்ட நிர்வாகிகள் திருத்தணி எஸ்.சந்திரன், கே.சத்தியராஜ், மா.ரகு, திருத்தணி நகர செயலாளர் மு.பூபதி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் ஜி.ரவீந்திரா முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் பூ.கன்னியப்பன், எஸ்.ஆர். ராமலிங்கம், கே.எம்.சுப்பிரமணி, நிர்வாகிகள் எஸ்.ஆர்.ரவி, சி.எம்.ரவி, எஸ்.ஆர்.செங்குட்டுவன், வி.ஜி.மோகன், சுகுமாரன், டி.வெங்கடாச்சலம், சிலம்பு பன்னீர்செல்வம், குமார், சரத்குமார், சி.பி.புருஷோத்தமன், முரசொலி மூர்த்தி, வி.எஸ்.சிங்காரம், பி.கே.சீனிவாசன், எஸ்.எஸ்.சுந்தரம், சேகர், சுப்பிரமணி, ஓ.என்.சதாசிவம், சண்முகம், மணி, நாகப்பன், மாத்தையா, பெருமாள், மாறன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Panchayat Council ,meeting ,RKPet Eastern ,Western Union ,Gummidipoondi KVV ,
× RELATED குறைதீர் கூட்டம்