×

செய்யாறு அருகே அரசு பள்ளியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

செய்யாறு, பிப்.1: செய்யாறு அடுத்த பூதேரிபுல்லவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று, தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் பத்மபிரியா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் விஜயகுமார் வரவேற்றார். மருத்துவர் என்.ஈஸ்வரி, சுகாதார மேற்பார்வையாளர்கள் ராதாகிருஷ்ணன், ராகவன், சுகாதார ஆய்வார் கே.சம்பத், கிராம சுகாதார செவிலியர் சகாயமேரி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தோலில் ஏற்படும் உணர்ச்சியற்ற படை அல்லது தேமல் தொழுநோயின் ஆரம்ப அறிகுறி. கூட்டு மருந்து சிகிச்சை மூலம் தொழுநோயை குறுகிய காலத்தில் முற்றிலும் குணப்படுத்த முடியும். ஆரம்ப நிலையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் ஊனம் வராமல் தடுக்கலாம். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர நல மையங்களில் தொழுநோய்க்கு சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது என வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு தொழுநோய் குறித்த விழிப்புணர்வு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டதில் தேர்வான முதல் மூன்று நபர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக, தொழுநோய் குறித்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Tags : Leprosy Awareness Camp ,Government School ,Kodar ,
× RELATED இந்தியாவிற்கு இந்த தேர்தல் மிகவும்...