இந்திய பட்டைய கணக்காளர் நிறுவன தேர்வுகளில் ஆதித்யா பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை

புதுச்சேரி, ஜன. 31:  இந்திய பட்டைய கணக்காளர் நிறுவனம் (ஐசிஏஐ) பட்டைய கணக்காளர் பதவிக்கான நுழைவுத்தேர்வை இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் நடத்தியது. இதில் புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் வணிகவியல் பாடத்தில் தேர்ச்சி பெற்ற விக்னேஷ், சாய்சத்தியா, நிலவரசி, கோயல், சிவசங்கரி, வர்ஷிணி ஆகிய 6 மாணவர்கள் முதல்நிலை தேர்வு எழுதி 2ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவன் விக்னேஷ் 400க்கு 307 மதிப்பெண்கள் பெற்று உயர்சிறப்பு வகுப்பில் (80 சதவீதத்திற்கு மேல்) தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்திய பட்டைய கணக்காளர் நிறுவனத்தால் 2018ம் ஆண்டிற்கான வர்த்தகமயமாக்கல் 2018 என்ற தலைப்பில் இந்தியா முழுவதுமாக பல நகரங்களில் கடந்த 20ம் தேதி தேர்வு மேற்கொள்ளப்பட்டது. இத்தேர்வு எழுதிய புதுச்சேரி ஆதித்யா பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி சுஜா தேர்ச்சி பெற்று 2ம் நிலை தேர்வுக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

இம்மாணவி புதுச்சேரி அளவில் தேர்ச்சி பெற்றுள்ள ஒரே மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. சாதனை மாணவ, மாணவிகளை பள்ளி நிறுவனர் ஆனந்தன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மேலும் பள்ளி தாளாளர் அசோக் ஆனந்த், வித்யநாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதா பூனமல்லி, பள்ளி முதல்வர்கள், இயக்குநர்கள், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்களும் மாணவர்களை பாராட்டினர்.

Related Stories:

>