×

காமராஜபுரம் 17ம் வீதி பகுதியில் மின்விசை பம்ப் பழுதால் குடிநீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்ககோரி மனு

புதுக்கோட்டை, ஜன. 31: புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நகர திமுக  செயலாளர் நைனாமுகமது கோரிக்கை மனு அளித்தார் அதில் புதுக்கோட்டை நகராட்சி 15வது வட்டம் காமராஜபுரம் 17ம் வீதி பகுதியில் ரேஷன் கடை முன்புள்ள மின்விசை பம்ப் பழுதாகி விட்டது. இதனால் அதன்மூலம் குடிநீர் பிடித்து வந்த மக்களுக்கு கிடைக்காத  சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை  எடுத்து மின்விசை பம்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : 17th Street of Kamarajapuram ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே...