×

போராட்டம் வாபஸ் ஆன பிறகு புதுகையில் 76 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் சிஇஓ உத்தரவால் பரபரப்பு

புதுக்கோட்டை,ஜன.31: புதுக்கோட்டை மாவட்டத்தில் 76 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ நிர்வா கிகள் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத் தில் ஈடுபட்டனர். கடந்த 23ம் தேதி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்று 15 பேரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதில் 14 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் வனஜா உத்தரவிட்டார்.

இதபோல் கடந்த திங்கள் அன்று ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போரா ட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கலந்து கொண்ட 77 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை சென்னையில் ஜாக்டோஜியோ நிர்வாகிகள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெருவதாக அறிவித்தனர். இன்று முதல் அனைவரும் மீண்டும் பணிக்கு திரும்புகிறோம் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த திங்கள் அன்று சிறைக்கு சென்ற 76 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வனஜா நேற்று இரவு உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : protest ,authors ,CEO ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி...